சென்னை மணலி புதுநகர் மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழுவின் சார்பில் நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளை ராஜசேகர் CMRL ப்ராஜெக்ட் அலுவலர் சந்தித்து நமது மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடிதம் கொடுத்தோம். அதோடு நமது மணலி புது நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சார்ந்த மக்களின் கையெழுத்திட்ட படிவக் கோப்பையும், பல்வேறு கல்வி, தொழில், சமூக நிறுவனங்கள், வணிகர் சங்கம் ஆகிய அமைப்புகள் கொடுத்த கோரிக்கைக்கு கடிதங்களையும் இணைத்து கொடுத்தோம். கடிதங்களைப் பெற்றுக் கொண்ட நிர்வாக அதிகாரிகள் நமது கோரிக்கையை கண்டிப்பாக பரிசீலனை செய்வதாகவும், நமக்கு சாதகமான நல்ல முடிவை விரைவில் தெரிவிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். நமது நகருக்கு மெட்ரோ ரயில் வேண்டி தொடர்ந்து ஆதரவையும் ஆலோசனைகளையும் செயல்பாட்டையும் நல்கி வரும் அனைத்து சங்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் பொது மக்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை! கோரிக்கை குழுவின் சார்பில் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
சென்னை மணலி புது நகருக்கு மெட்ரோ ரயில் சேவை வேண்டி மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கோரிக்கை கடிதம் வழங்குதல்…!
Related Posts
Add A Comment


