குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்றும், இந்திய குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) என்றும், இந்திய சாட்சியச்சட்டம் பாரதிய சாக்க்ஷய அதிநியம் (பிஎஸ்ஏ) என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சட்டப் பிரிவுகளிலும் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அம்ல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 3 புதிய சட்டங்களையும் முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்ற பணிகளை புறக்கணித்துள்ளனர். அதன்படி தூத்துக்குடியில் உள்ள 152 பெண் வழக்கறிஞர்கள் உட்பட852 வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்தனர் இதனால் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று நடைபெற வேண்டிய விசாரணைவழக்குகள் அனைத்தும் மறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
இது குறித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தனசேகர் டேவிட் கூறியதாவது “மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஏற்கனவே தூத்துக்குடியில் வழக்கறிஞர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தற்போது இந்த மூன்று சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வருவதால்தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் எடுத்த முடிவுபடி இன்று ஒரு நாள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்து உள்ளோம். அடுத்த கட்டமாக பார் கவுன்சில் முடிவு படி மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்


