மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வழக்கறிஞர் அணி வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர்கள் விபி செல்வகுமார், இளம்பருதி குபேர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
காங்கிரஸ் மாநில வழக்கறிஞர் அணி இணை தலைவர் மூத்த வழக்கறிஞர் மகேந்திரன் பர்னபாஸ், தூத்துக்குடி மாவட்ட அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்எஸ்பி அசோக், மாநகர அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், திமுக மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கேஎஸ் ரூபஸ் அமிர்தராஜ், மாநகர தலைவர் நாகராஜ் ராஜா, வழக்கறிஞர்கள் ரூப ராஜா, ஜெசுபாக்கியநாதன், மணிகண்டன், திலீபன், கிங்ஸ்ட்டர் செல்லத்துரை, செல்வலட்சுமி, அமுதவல்லி, பாரதி, சாரதா, அகிலா, முனீஸ்குமார், கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்


