இதுகுறித்து திருச்செந்தூர் மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்செந்தூர் கோட்டத்திற்குள்பட்ட கல்லாமொழி யுபிசிஎல் உபமின் நிலையத்தில் (ஜூலை 20) நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், சுனாமிநகர், சூசைநகர், குலசேகரன்பட்சினம், மணப்பாடு, சிறுநாடார்குடியிருப்பு, நா.முத்தையாபுரம், மறவன்விளை, நாலுமூலைக்கிணறு போன்ற பகுதிகளுக்கும், மேலும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளுக்கும், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


