Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களின் மதிப்பூதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடுக தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்- தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
    இந்தியா

    பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களின் மதிப்பூதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடுக தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்- தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

    SahabudeenBy SahabudeenJuly 22, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், அவர்களுக்கான மதிப்பூதியத்தை ரூ.50 ஆயிரமாக வழங்காமல் இருப்பதோடு, கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்தில் சுமார் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7300 க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றார்கள். தற்போது தான் அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பூதியமே வழங்கப்படுகிறது. இந்த மதிப்பூதியமும் ஆண்டின் மே தவிர்த்த மற்ற 11 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 2019 ஜனவரி 28 அன்று ஆணையிட்டது. அந்த ஆணையை தமிழக அரசு செயல்படுத்தாத நிலையில், கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 21 அன்று உத்தரவிட்டது. ஆனால், 4 மாதங்களான பின்னரும் அந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மட்டுமின்றி, அவர்களுக்கான முந்தைய ஊதியத்தைக் கூட கடந்த 3 மாதங்களாக தமிழக அரசு வழங்கவில்லை. தமிழக அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

    கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக 1996 ஆண்டு முதல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான முறையான ஊதியத்தை வழங்குவதில் தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் நிலைக்கு சென்றுவிட்ட நிலையில், ரூ.20 ஆயிரத்தைக் கொண்டு ஒரு கவுரவ விரிவுரையாளர் வாழ்க்கையை கடத்துவது என்பது மிகக் கடினம்.

    Post Views: 156
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.