தூத்துக்குடி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சீருடையினை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், சமூக நலத்துறை சார்பில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவ/மாணவியர்களுக்கான சீருடையினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட சமூகநல அலுவலர் பெ.பிரேமலதா, மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், 9வது வார்டு உறுப்பினர் ஜெபஸ்டின் சுதா ஆகியோர் உடன் உள்ளனர்.


