Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » அண்ணா பல்கலை.,
    இந்தியா

    அண்ணா பல்கலை.,

    SahabudeenBy SahabudeenDecember 26, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை!

    உயர்கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி வருவது கவலை யளிக்கின்றது!

    -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

    அண்ணா பல்கலை., வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை!

    உயர்கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி வருவது கவலையளிக்கின்றது! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

    இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், விடுதியில் தங்கி படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றது. இந்த சம்பத்தை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    பாதுகாப்பு நிறைந்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை நோக்கி கேள்வி எழுப்புகின்றது.

    தமிழகத்தில், உயர்கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி வருவது கவலையளிக்கின்றது. சென்னை ஐஐடி-யில் விடுதியில் தங்கிப் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் இதுவரை நீதி கிடைக்கப் பெறவில்லை.

    இந்தியாவில் சென்னை தான் பெண்கள் பாதுகாப்பில் சிறந்து விளங்குவதாக கூறப்படும் நிலையில், நடைபெறும் பெண்களுக்கு எதிரான நிகழ்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    ஆகவே, தமிழக அரசு இதனை கவனத்தில்கொண்டு உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்தவும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் வகையிலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக கைது செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Post Views: 164
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.