Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பத்திரிகை சங்க பெண் தலைவரையும் தமிழக முதல்வரின் துணைவியாரையும்
    இந்தியா

    பத்திரிகை சங்க பெண் தலைவரையும் தமிழக முதல்வரின் துணைவியாரையும்

    SahabudeenBy SahabudeenJanuary 18, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அவதூறாக பேசியவர் கைது.!

    தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியனின் தலைவர் சிங்க தமிழச்சி மற்றும் தமிழக முதல்வரின் துணைவியாரை தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசிய கொளத்தூர் அருகே பெரவள்ளூரை சேர்ந்த சத்யராஜ் என்பவரை அண்ணா நகர் சைபர் குற்றப்பிரிவு நான்கு பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தது.

    சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் சங்கத்தின் தலைவர் ஜூபிடர் ரவி என்கின்ற ரவிச்சந்திரன் கடந்த 2024 ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். அதன் பிறகு சங்கத்தின் தலைவராக சிங்க தமிழச்சி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அனைத்து நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சங்கத்தை வழி நடத்தி வந்தார்.

    இந்நிலையில் காகிதப்பூ என்ற பத்திரிகை நடத்தி வரும் சத்யராஜ் என்பவர் சங்க நிர்வாகிகளை மிரட்டுவது, சமூக வலைதளங்களில் சங்கம் குறித்து தவறாக பதிவிடுவது, நக்கல் நையாண்டியாக பேசுவது, ஒருமையில் திட்டி கொலை மிரட்டல் விடுவதுமாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சங்க நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் தமிழ்நாடு செய்தித்துறை யூனியனின் தலைவர் சிங்க தமிழச்சியை பற்றியும் தமிழ்நாடு முதலமைச்சரின் துணைவியாரையும் தகாத அருவருப்பான வார்த்தைகளால் பேசியும் சிங்க தமிழச்சி அவர்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாகவும் பதிவிட்டுள்ளார் . இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் சென்னை பெருநகர் காவல் ஆணையர் அவர்களிடம் சங்க நிர்வாகிகளோடு சிங்க தமிழச்சி புகார் கொடுத்துள்ளார்.

    அப்புகாரை விசாரித்த அண்ணா நகர் சைபர் குற்றப்பிரிவினர், தொடர்ந்து சத்யராஜ் சிங்கத்தமிழச்சி மீதும் முதல்வரின் மனைவியையும் மற்ற சங்க பெண் உறுப்பினர்களின் மீதும் அவதூறு பரப்பி வந்ததை உறுதி செய்ததால் நேற்று ஜனவரி 17 அன்று சத்யராஜ்  மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசியது, சமூக வலைதளங்களில் பெண்களை தவறாக பதிவிட்டது என நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்யராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து சங்க பேரையும் சங்க நிர்வாகிகளையும் தவறாக சித்தரித்து அவதூறு பரப்பி வந்த சத்யராஜ் பயன்படுத்திய ஐந்து செல் நம்பர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை என பல மாவட்ட நிர்வாகிகள் இவர் மீது ஆன்லைன் புகார் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Post Views: 216
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.