நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். வாக்காளர் மைய பொறுப்பாளர் தனபால் வரவேற்றார். நேர்மையாக வாக்குகளை செலுத்திட வேண்டும் என்பதன் அடிப்படையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர்களாக தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் எதுவும் இருந்தால் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் தினத்தை குறிக்கும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு ரங்கோலி வரையப்பட்டிருந்தது.வாக்காளர் பதிவு அலுவலர்கள் பராசக்தி, காசிமயில் மற்றும் நேசராணி ஆகியோர் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா
Related Posts
Add A Comment


