தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவர் டாக்டர் எஸ் ஜே கென்னடி பாராட்டி நன்றி தெரிவித்து அவர் கூறியதாவது.தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2025 – 2026 வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் ரூபாய் 1 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் மாநில தலைவரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
படவிளக்கம்.டாக்டர் எஸ் ஜே கென்னடி


