நெல்லை மாநகரில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்துள்னர்.
நெல்லை மாநகரில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் முகமது தவுபிக் (எ ) கிருஷ்ணமூர்த்தி என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் நெல்லை மாநகர கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெருமாள்புரம் காவநிலையம், ரெட்டியாப்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரலில் போலீசார் விரைந்து சென்றனர்.
அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபொழுது, தலைமை காவலர் ஆனந்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து முகமது தவுபிக் (எ) கிருஷ்ண மூர்த்தியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.


