Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்பாசன வாய்க்காலில் கழிவுநீர் விவசாயிகள் கவலை

பாசன வாய்க்காலில் கழிவுநீர் விவசாயிகள் கவலை

கும்பகோணம் உள்ளூர் ஊராட்சி கணேஷ் நகர் ஆரம்பம் முதல் செட்டி மண்டபம் புறவழிச்சாலை அருகேமூப்பனார் நகர் நுழைவுப் பகுதிவரை உள்ள பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலந்து ஓடுவதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.இப்பகுதி வழியாகச் செல்லும் பி கிளாஸ் வாய்க்கால் கும்பகோணம் டவுன் வழியாக சென்று செட்டி மண்டபம் உள்ளூர் ஊராட்சியை அடைந்து பின்னர் அங்கு உள்ள ஏ கிளாஸ் வாய்க்காலில் உடன் இணைந்து பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குப் காவிரி நீர் பாசன வசதி அளித்து வருகிறது. தற்போது நமது செய்தியாளர் சென்று பார்வையிடும் பொழுது வாய்க்கால் நீர் கருமை நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது. வாய்க்காலின் இரு கரைகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் பைகள், கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. நீர்ப்பரப்பில் ஆகாயத்தாமரைகளும் படர்ந்து காணப்படுகின்றன.கழிவுநீர் கலந்த தண்ணீரைப் பயிர்களுக்குப் பாய்ச்சினால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் குறையும் அபாயம் உள்ளதாகவும், மண்ணின் வளம் குன்றுவதோடு நிலத்தடி நீரும் மாசடையும் என்றும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பைகளால் தண்ணீர் கடைமடை வரை செல்வதிலும் சிரமம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், இப்பிரச்னையில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் உடனடியாகக் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பித்து, கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, வாய்க்காலைத் தூர்வாரி, விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.செய்தியாளர் அ.மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read