Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணம் வார்டு 42-ல் மழைநீர் தேக்கம் சீரமைப்பு

கும்பகோணம் வார்டு 42-ல் மழைநீர் தேக்கம் சீரமைப்பு

கும்பகோணம் மாநகராட்சி 42-ஆவது வார்டுக்கு உட்பட்ட ஜே.பி. மேலத் தெருவில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்த மழையால், அப்பகுதியில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.இதையறிந்த திமுகவைச் சேர்ந்த வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி அண்ணாதுரை, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், மாநகராட்சி நிர்வாகத்தின் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றி, சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டார்.கும்பகோணம் மாநகரில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததே, சிறிதளவு மழை பெய்தாலும் தெருக்களில் தண்ணீர் தேங்குவதற்கு முக்கியக் காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இதையடுத்து, மழைநீர் தேக்கத்தை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுத்த 42-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி அண்ணாதுரை, சுகாதார ஆய்வாளர் ரோகிணி மற்றும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read