மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கும்பகோணத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கும்பகோணம் அல் அமீன் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வருவாய் கோட்டாட்சியர் திருமலை தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் கார்த்திகேயன், மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சார்பில் ஸ்ரீமதி, துறை சார்ந்த அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இதில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்கம் – தமிழ்நாடு சார்பில் தலைவர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், துணைத் தலைவர் வழக்கறிஞர் சக்திவேல் முருகன், ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் ஆகியோர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் திருமலையிடம் அளித்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டதாவது மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பைத் தளர்த்தியதற்கும், மாற்றுத்திறனின் அளவை 40 சதவீதமாகக் குறைத்ததற்கும் மத்திய அரசுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், அதேபோல், 100 நாள் வேலைத் திட்டத்தை வி பி ஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் 150 நாள்களாக உயர்த்தியதற்குத் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம். என அதில் குறிப்பிட்டு இருந்தது,பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெறும் ரூ.300-லிருந்து ரூ.375 ஆக மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என மனுவில் தெரிவித்திருந்தனர் அதேபோல் மாற்றுத்திறனாளிகளைப் பிச்சைக்காரர்களாக அரசு நினைத்துவிட்டதா? என்ற கேள்வியையும் எழுப்பிய அவர்கள், உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தனர், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விரைவு அதிவிரைவு ரயில்களில் முன் பின் இரு புறங்களிலும் ஏற்கனவே இருந்தது போன்று இரண்டு மாற்று திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் எனவும், ரயில் முன்பதிவில் 5 சதவீத இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் ரயில் பயணச் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து அந்த்யோதயா அட்டைகளாக மாற்றுவதற்குச் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும், உள்ளாட்சித் தேர்தல்களில் நியமனப் பதவிகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தனசெய்தியாளர் அ.மகேஷ்
