Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் மழையில் நனைந்தது மூட்டைகள்!

பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் மழையில் நனைந்தது மூட்டைகள்!

தார்ப்பாய்களை முறையாகப் போடாததால் அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் வினோத்!

கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளுக்குத் தார்ப்பாய்கள் முறையாகப் போடப்படாததால், மழையில் நனைந்து சேதமடைந்தன. இதைக் கண்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், அதிகாரிகளை கண்டித்தார்பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வினோத், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளைப் பார்வையிட்டார். அப்போது, மழையிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டிய தார்ப்பாய்கள் முறையாக மூடப்படாமல் கீழே கிடந்ததும், சில நெல் மூட்டைகள் மழையில் நனைந்திருந்ததையும் பார்வையிட்டார் அப்போதுசம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்ட அமைச்சர், நெல் மூட்டைகளைப் பாதுகாப்பதில் அலட்சியமாகச் செயல்பட்டதற்காகக் கண்டித்தார். வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு டெல்டா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், போர்க்கால அடிப்படையில் நெல் மூட்டைகளை முறையாகப் பாதுகாக்காவிட்டால் பெருமளவில் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.மேலும், உயர் அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் உள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் தார்ப்பாய்களால் முறையாக மூடி, மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார் மழையிலிருந்து நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளின் கண்காணிப்பில் ஏற்பட்ட குறைபாடு, அமைச்சரின் திடீர் ஆய்வின்போது வெளிப்பட்டது.இந்த நிகழ்வில், வேளாண்துறை அரசு அதிகாரிகள் உட்பட தவெக தஞ்சை கிழக்கு மாவட்ட பொருளாளர் விஜய் சந்திரன், மாநகரச் செயலாளர் முருகானந்தம், சுதாகர், பெருசு ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read