Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணத்தில் மேலும் 5 புதிய வெற்றிப் பயணப் பேருந்து சேவைகள் தொடக்கம்!

கும்பகோணத்தில் மேலும் 5 புதிய வெற்றிப் பயணப் பேருந்து சேவைகள் தொடக்கம்!

மாண்புமிகு வேளாண் அமைச்சர் ர. வினோத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள், மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கல்லூரி மாணவிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், மேலும் 5 புதிய வெற்றிப் பயணப் பேருந்து சேவைகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் புதன் கிழமை கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.5 புதிய பேருந்துகளின் வழித்தடங்கள்இதன்படி, கும்பகோணம் பேருந்து நிலையத்தில் உள்ள முதல் கிளை நகர் தடத்தில் இருந்து கும்பகோணம்-ஆரலூர் செறுகடம்பூர் (வழி) A9, என்ற பேருந்தும், கும்பகோணம்-திருப்புறம்பியம் கொத்தங்குடி (வழி) A65, என்ற பேருந்தும், கும்பகோணம்-பந்தநல்லூர் ஆடுதுறை (வழி) A64 ஆகிய எண் கொண்ட பேருந்துகளும், இயக்கப்படுகின்றன, மேலும் கும்பகோணம் டு சுவாமிமலை கும்பகோணம் வட்டப் பேருந்தும், இயக்கப்படுகின்றன தொடர்ந்து கும்பகோணம் இரண்டாவது கிளை நகர் தடத்தில் இருந்து இயங்கும் கும்பகோணம்-வடமட்டம் மல்லபுரம், திருமலைராஜபுரம் வழியாக செல்லும் A58 எண் கொண்ட பேருந்துகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் வசதிகளுக்காக இயக்கப்படுகின்றன.குறிப்பாக, கும்பகோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வழியாகச் சுவாமிமலை வரை இயக்கப்படும் புதிய வட்டப் பேருந்து சேவையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். கொடியசைத்துத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அமைச்சர் வினோத் மகளிருக்கு இனிப்புகளை வழங்கி, பின்னர் இலவசப் பயணச்சீட்டுகளையும் வழங்கினார்.தொடர்ந்து, மாணவிகளுக்காகத் தொடங்கப்பட்ட புதிய பேருந்தில் பயணம் செய்த அவர், கல்லூரி மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், மாணவிகளுடன் இணைந்து கும்பகோணம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வரை பயணம் செய்து, பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் முறையாக நிறுத்தப்படுகின்றனவா என்றும், மாணவிகளுக்குக் குறைகள் ஏதேனும் உள்ளனவா என்றும் கேட்டறிந்தார், மேலும் ஏதேனும் புகார்கள் தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வெற்றிப் பயணத் திட்டம்முன்னதாக, கடந்த அக். 2-ஆம் தேதி கும்பகோணம் பேருந்து நிலையத்தில் மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி தொடங்கி வைத்து, மகளிருக்கு இலவசப் பயணச்சீட்டுகளை வழங்கினார். அப்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் 89 புறநகர்ப் பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் லிட் நிர்வாக இயக்குநர் வி. தெட்சணாமூர்த்தி, கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியர் வி.எம். திருமலை, துணை மேலாளர் எஸ். ராஜேஷ், உதவி மேலாளர் ஜி. ராஜ்மோகன், தமிழ்நாடு அரசு கும்பகோணம் போக்குவரத்து கழகத்தின் பணிமனை 1 மற்றும் 2 கிளை மேலாளர்கள், அரசு அலுவலர்கள், தவெக முக்கிய கழக நிர்வாகிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் அ.மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read