தமிழக முன்னாள் முதல்வர், பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, கழக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பிரபு, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்.ஜி.ஆர் மன்றம் எம்.பெருமாள், இலக்கிய அணி நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் டேக் ராஜா, மாணவரணி பில்லா விக்னேஷ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை தனராஜ், சிறுபான்மை பிரிவு கே.ஜெ.பிரபாகர், பகுதி கழக செயலாளர்கள் முருகன், சேவியர், ஜெய்கணேஷ், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழில் சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் மனுவேல்ராஜ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டலச் செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், முன்னாள் அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர¦கள் முனியசாமி, சரவணபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முத்துக்கனி, நவ்சாத், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், கவுன்சிலர் வெற்றிச்செல்வன், கே.கே.பி.விஜயன், சொக்கலிங்கம், உலகநாதபெருமாள், மாவட்ட மகளிர் அணி மெஜிலா, ராஜேஸ்வரி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா மாவட்ட மாணவரணி அலெக்ஸ்.ஜி, ஜெயகுமார், முன்னாள் வட்ட கழக செயலாளர், மகாராஜன், பாலஜெயம், சாம்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


