கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கத்தின் 2026–27-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா, கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் உள்ள வள்ளலார் தொடக்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு சங்கத் தலைவர் லயன் ஏ.என். சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட முதல் துணை நிலை ஆளுநர் லயன் டாக்டர் டி. ஸ்டாலின், புதிய நிர்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட இரண்டாம் துணை நிலை ஆளுநர் லயன் கே. ராமதுரை, புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து சிறப்புரையாற்றினார்.2026–27-ஆம் ஆண்டிற்கான சங்கத் தலைவராக லயன் எம். கருணாகரன், செயலாளராக லயன் ஆர். சிவராமகிருஷ்ணன், பொருளாளராக லயன் ஆர். ஏசுராஜ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும், லயன் ஏ.என். சரவணன், லயன் ஜி. அசோகன், லயன் ஆர். கணேசன், லயன் கே. அருள், லயன் ஜி. பெருமாள், லயன் எஸ். அமுதச்செல்வி, லயன் கிருஷ்ணமூர்த்தி, லயன் மாதவன், லயன் ஜெகநாதன், லயன் சந்தோஷ் உள்ளிட்டோர் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.மாவட்ட முதல் துணை நிலை ஆளுநர் லயன் டாக்டர் டி. ஸ்டாலின், பதவியேற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, லயன்ஸ் இயக்கத்தின் சேவைப் பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். தொடர்ந்து, மாவட்ட இரண்டாம் துணை நிலை ஆளுநர் லயன் கே. ராமதுரை புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.விழாவில் மாவட்ட நிர்வாகிகளான லயன் பி. செந்தில்குமரன், லயன் காசி பாலசுப்பிரமணியன், லயன் என். சிவராமகிருஷ்ணன், லயன் சங்கரலெட்சுமி காளிதாஸ், லயன் வி. கோபால்சாமி, லயன் எஸ். மோகன், லயன் டாக்டர் மரியகிறிஸ்துராஜ், லயன் எம். மாறன், லயன் கே.ஆர். மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பல்வேறு லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.செய்தியாளர் அ. மகேஷ்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கீழக்கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு
Related Posts
Add A Comment

