தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவரும் திமுக தோழமைக் கட்சியுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்
1972 ஆம் ஆண்டிலிருந்து தன்னை அரசியல் கட்சி நினைத்துக் கொண்டு திராவிடக் கொள்கையின் அடிப்படையில் எம்ஜிஆர் தலைமையில் அதிமுக கட்சியில் தமது அரசியல் பயணத்தை தொடங்கிய ஈரோடு மாவட்ட செங்கோட்டையன் அவர்கள் தொடர்ந்து கிட்டத்தட்ட 9 முறை சட்டமன்ற உறுப்பினராக அரசில் பதவி மற்றும் அரசு பதவியை சுவைத்த செங்கோட்டையன் அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்று தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்திருக்கிறார் இரண்டு வாரங்களுக்கு முன்பாக டெல்லியில் பாஜகவில் இருக்கக்கூடிய முக்கிய முன்னணி தலைவர்களை சந்தித்து அதிமுகவே ஒருங்கிணைப்பேன் என்று சூளுரைத்த செங்கோட்டையன் அவர்கள் தற்பொழுது பாஜக பின்புலத்தில் இயங்கக்கூடிய விஜயை தலைவராக ஏற்றுக்கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கியது முழுக்க முழுக்க திராவிடர் கொள்கைக்கு செய்திருக்கக் கூடிய பெரும் துரோகம் மேலும் தம்மை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த மக்களுக்கு செய்திருக்கக் கூடிய பச்சை துரோகம் அப்போது செங்கோட்டையன் எத்தனை வருடங்களாக அரசியலில் இயங்கியது வெறும் பதவி சுகத்திற்காக மட்டுமே கொள்கை அடிப்படையில் இல்லை என தெளிவாக இன்றைய நடவடிக்கை மூலமாக தெரிகிறது மேலும் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் அவர்கள் தவெக வில் இணைந்தது மூலம் மிகப்பெரிய அளவில் அரசியலில் ஜொலிக்கலாம் என நடிகர் விஜய் அவர்கள் தப்பு கணக்கு போட்டு இருப்பது மிகப்பெரிய தன்னை நகைச்சுவை நடிகராக சிந்தித்து இருக்கிறார் என இதுவும் தெளிவாகத் தெரிகிறது காரணம் அதிமுகவில் இருந்து விஜய் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் அவர்களின் பின்னால் ஒரு 50 ஒன்றிய செயலாளர் இணைவார்களா அல்லது ஐந்து மாவட்டச் செயலாளர்கள் இணைவார்களா அல்லது ஒரு ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இணைவார்களா இப்படி முன்னணி பொறுப்பாளர்கள் அதிமுகவில் இருந்து எவரும் இனிய தயாராக இல்லாத போது கூலிக்கு பணம் கொடுத்து அதிமுக தொண்டர்கள் எனவும் அதிமுக பொறுப்பாளர்கள் எனவும் ஒரு மாயையை விஜய்யிடம் செங்கோட்டையினால் ஏற்படுத்த முடியுமே தவிர அதில் இருக்கக்கூடிய முன்னணி பொறுப்பாளர்களோடு சென்று சேரவே வாய்ப்பில்லை என்பதனை இன்று அவர் சந்தித்தபோது உடன் பெரிய அளவில் முக்கிய பொறுப்பாளர்கள் இல்லாதது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது அது மட்டுமல்ல அரசியல் கத்துக்குட்டி விஜய் அவர்கள் பாஜக வினுடைய B டீமாக செயல்பட்டு திமுகவை மட்டுமே எதிர்த்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் விஜய் அவர்களுடைய கனவும் செங்கோட்டையனுடைய கனவும் தமிழ்நாட்டு மக்களால் தூளாக சிதறடிக்கப்படுவது உறுதியான இதன் மூலம் தெரிகிறது மேலும் இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் திராவிட மாடல் நாயகன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுடைய தலைமை மீண்டும் 2026 ல் தனி பெரும்பான்மையோடு கூட்டணி கட்சிகளை அரவணைத்து மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக அரியணையில் ஏறுவார் இதற்கு தமிழ்நாடு மக்கள் விஜய் போன்ற நாடக நடிகர்களை நம்பாமல் மு க ஸ்டாலின் அவர்களை ஆட்சியிலே அமர வைப்பார் என்பதை இதன் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது பனையூர் பங்களாவில் இருந்து கொண்டே தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி முதலமைச்சர் ஆகிவிடலாம் என்கின்ற ஆணவப் போக்கையும் தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்து தவெக கட்சிக்கு தோல்வியான வரிசை தமிழக மக்கள் கொடுப்பார்கள் எனவும் விஜய் அவர்கள் தொடர்ந்து மக்களை சந்திக்காமல் கோமாளி வித்தைகளை செய்து வந்தால் விஜய் அவர்களே டெபாசிட் வாங்காத வகையில் தமிழக மக்கள் பரிசளிப்பார்கள் என அறிக்கையில் ஜி ஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்

