Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேலக்காவிரி ஆற்றங்கரையில் தூய்மைப் பணி அமைச்சர் ஆர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேலக்காவிரி ஆற்றங்கரையில் தூய்மைப் பணி அமைச்சர் ஆர்.

வினோத் ரவி பங்கேற்று தொடங்கி வைத்தார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேலக்காவிரி ஆற்றங்கரையில் தூய்மைப் பணி அமைச்சர் ஆர். வினோத் ரவி பங்கேற்று தொடங்கி வைத்தார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் வேலக்காவிரி ஆற்றங்கரையில் மாணவர் அமைப்பினர் நடத்திய தூய்மை பணியினை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவி பங்கேற்று தொடங்கி வைத்தார்.

காவிரி ஆற்றில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் நச்சுக் கழிவுகள் கலப்பதால் நீரின் தரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணியில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். ஆற்றங்கரையில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் காவிரி தூய்மைக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த தேசிய சேவை திட்டம் தேசிய மாணவர் படை இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும், கும்பகோணம் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் அமைப்பினர், இந்திய மருத்துவச் சங்கம் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து ஆற்றங்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மக்கள் நல முயற்சி, காவிரி ஆற்றின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் சிறப்பான இயக்கமாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் இந்தத் தூய்மைப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், காவிரியில் தண்ணீர் வரும்வரை இந்தப் பணிகள் இடைவிடாமல் முன்னெடுக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னார்வலர்களாக இணைந்து செயல்பட்ட இந்த முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்வள மேலாண்மையின் அவசியத்தை பொதுமக்களிடையே வலியுறுத்தியதுடன், காவிரி ஆற்றின் தூய்மையைப் பாதுகாப்பதற்கான சமூகப் பொறுப்புணர்வையும் வலுப்படுத்தியுள்ளது.

செய்தியாளர் அ.மகேஷ்

Must Read