தவெக வில் இணைய விஜய பாஸ்கர் முயற்சி, தவெக.கட்சியினர் எதிர்ப்பு
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகிய சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைய திட்டம்
முதலமைச்சர் விஜய் தலைமையில் திங்கட்கிழமை இணைப்பு நிகழ்ச்சி என கூறப்பட்ட நிலையில் தள்ளிப்போவதாக தகவல்
தனது ஆதரவாளர்கள் 5000 பேருடன் தவெகவில் இணைய திட்டமிட்டிருந்த சி.விஜயபாஸ்கர்
தவெகவில் எதிர்ப்பு எழுந்து உள்ளதால் தான் விஜயபாஸ்கர் இணைப்பு தள்ளிப் போனதற்கு முக்கிய காரணம் என தகவல்
விஜயபாஸ்கர் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்தை மட்டுமே 2 முறை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்
தவெகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் விஜயபாஸ்கரை கட்சியில் இணைக்க கடும் எதிர்ப்பு என தகவல்
புதுக்கோட்டை மாவட்ட தவெக நிர்வாகிகளும் விஜயபாஸ்கரை கட்சியில் இணைய எதிர்ப்பு என தகவல்
அதிமுகவில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது
விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது
ஊழல் வழக்குகள் உள்ள விஜயபாஸ்கரை ஏன் தவெகவில் இணைக்க வேண்டும்? – மூத்த நிர்வாகிகள்
மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு காரணமாக விஜயபாஸ்கரை தவெகவில் இணைப்பது தள்ளிப்போவதாக தகவல்

