Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணத்தில் பெரியார் சிலைக்கு தவெகவினர் மரியாதை

கும்பகோணத்தில் பெரியார் சிலைக்கு தவெகவினர் மரியாதை

தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாளையொட்டி, தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆலோசனையின்படியும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் வழிகாட்டுதலின்படியும், கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட கழகப் பொருளாளர் ஆர். விஜய்சந்திரன் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்து, கொள்கை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பின்னர் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி அஞ்சனா பாலாஜி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெஞ்சமின், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினித், ஹரி, சம்பத், சுதாகர், நால்ரோடு பகுதி செயலாளர் சதீஷ், விஜய பிரபு, தீபன், பஸ் ஸ்டாண்ட் பாக்கியா உள்ளிட்ட மாவட்ட, மாநகர சார்பு அணியினர், பகுதி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் அ.மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read