தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜி ஜி தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில்
கேரளம் முழுவதும் ஷிகெல்லா பாக்டீரியா அதிவேகமாக பரவிவரும் நிலையில், மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும்கோழிக்கோட்டில் 3 பேர், வயநாட்டில் 2 பேர், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுஜூனில் மட்டுமே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு. சுகாதார துறை தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியும் தொற்று அதிகரித்து கொண்டே செல்வதால் மக்கள் கலக்கம். இந்தாண்டில் இதுவரை 256 பேர் பாதிக்கப்பட்டு, 6 பேர் உயிரிழப்பு நடந்துள்ளது. நிலைமை இப்படி இருக்க தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரும் இதுவரை இது சம்பந்தமாக எந்தவித விழிப்புணர்வு விளம்பரமோ அல்லது பொதுமக்கள் மத்தியில் நேரடியாக எடுத்திருக்கும் வகையில் குழுக்களோ எந்த விதமான ஏற்பாட்டிற்கும் முன் வராதது பெரும் கவலை அளிக்கிறது நமது பக்கத்து மாநிலமாக இருக்கும் கேரளத்தில் இந்த தொற்று மேலும் மேலும் பரவி வரும் இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் இது சம்பந்தமாக எவ்வித முன்னெடுப்பும் எடுக்காமல் இந்த துறையைச் சார்ந்த அமைச்சரும் தமிழ்நாடு முதலமைச்சரும் அமைதி காத்து வருவது எவ்வகையில் நியாயம் ஒருவேளை மக்களுக்கு தொற்று தமிழ்நாட்டில் பரவிய பிறகு நடவடிக்கை எடுப்பதின் மூலம் எப்படி முழுமையாக மக்களை பாதுகாப்போம் என்று சொல்ல முடியும் வருமுன் காப்பது தான் ஒரு சிறந்த அரசுக்கு அழகு ஆகவே உடனுக்குடன் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் இந்தத் தொற்றின் தாக்கத்தை உணர்ந்து உடனுக்குடன் தனி கவனம் செலுத்தி தமிழ்நாட்டு மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாத்திட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

