Homeதமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது..!

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது..!

முதலமைச்சர் விஜயை ஒருமையில் அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 20-ஆம் தேதி ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து ஒருமையிலும் அவதூறாகப் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.தனது காரில் காவல் நிலையத்துக்கு வருவதாக அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதை ஏற்க மறுத்த போலீசார், அவரை காவல் துறை வாகனத்தில் ஏற்றினர். அப்போது, அவரது ஆதரவாளர்கள் காவல் துறைவாகனத்தில் ஏற்றினர். அப்போது, அவரது ஆதரவாளர்கள் காவல் துறை வாகனத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read