Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » நாளை வெளியாகும் ’எஸ்கே 25′ படத்தின் அறிவிப்பு
    சினிமா

    நாளை வெளியாகும் ’எஸ்கே 25′ படத்தின் அறிவிப்பு

    SahabudeenBy SahabudeenJanuary 27, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அமரன்’ படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதே சமயம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23– வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24- வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

    இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

    இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளார்.

    இப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தநிலையில், ‘எஸ்கே 25’ திரைப்படத்தின் அறிவிப்பு ஒன்று நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    Post Views: 168
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    என் அறை முழுக்க அந்த ஹீரோவோட புகைப்படங்கள்தான்’…. நடிகை நாக துர்கா

    January 17, 2026

    சூர்யா படத்தில் இணைந்த “லோகா” பட நடிகர்

    November 3, 2025

    சூர்யா 46′ படத்தில் இணைந்த கேஜிஎப் நடிகை

    October 27, 2025
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.