நாசரேத் அருகே பைக் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத் கனகராஜ் தெருவைச் சேர்ந்தவர் ஜெபதாஸ் ராஜேந்திரன் (54). இவர், தபால் நிலைய அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ம்தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது பைக்கை யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து ஜெபதாஸ் ராஜேந்திரன் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருடிய மர்மநபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நாசரேத் இன்ஸ்பெக்டர் கங்கைநாதபாண்டியன் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் வெள்ளமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாசரேத் அருகே உள்ள அரசாங்கநகரைச்சேர்ந்த முண்டன் மகன் சண்முகம் (37) என்பதும், ராஜேந்திரன் வீட்டில் பைக் திருடியவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து பைக் மீட்கப்பட்டது.
படம் விளக்கம்
நாசரேத் அருகே பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சண்முகம்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
நாசரேத் அருகேதபால் நிலைய அதிகாரி வீட்டில் பைக் திருடியவர் கைது
Related Posts
Add A Comment


