Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    June 2, 2026

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    மாவட்ட செய்திகள்

    கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    SahabudeenBy SahabudeenMay 18, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் அருகே சோகம்:

    சாத்தான்குளம் அருகே 50 அடி ஆழ கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை ஆலயத்தில் பிரதிஷ்டை விழா நடைபெற்று வருகிறது.

    இதில் கலந்து கொள்வதற்காக, கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஆம்னி வேனில் வந்துள்ளனர்.

    நேற்று(மே 17) மாலை 4 மணி அளவில், சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணி- மீரான்குளம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது.இதில் அந்த காரில் வந்த சைனி கிருபாகரன், ஜெனிட்டா, எஸ்தர் ஹெர்சோம் ஆகிய மூவரும் வெளியே தப்பி வந்துள்ளனர். மேலும் இந்த வாகனத்தில் வந்த மோசஸ், வசந்தா, ரவி, ஒன்றரை வயது குழந்தையான ஸ்டாலின், ஹெத்சியா கிருபா ஆகிய ஐந்து பேரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதில் வெளியே வந்தவர்கள் அந்த வழியாக சென்ற வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகே உள்ள கிராம மக்களிடம் தகவல் தெரிவித்து அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தடுப்புச்சுவர் இல்லாத இந்த கிணறு சுமார் 50 அடி ஆழம் கொண்டதாகும் எனவே கிராம மக்கள் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில் கிராம மக்கள் அருகே உள்ள சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் அந்த பகுதியில் இடத்துக்குள் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அது முடியாமல் போனது. தொடர்ந்து அருகே இருந்த ஜேசிபி மூலம் அவர்களை மீட்பதற்கான பணிகள் நடந்தது. அதுவும் முடியாத சூழலில் தற்போது 5 மணி நேரத்திற்கு மேலாக உள்ளே சிக்கியவர்களை மீட்க முடியாமல் தீயணைப்புத் துறையினரும் பொதுமக்களும் திணறினர்.

    இதற்கிடையில் தூத்துக்குடியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் கிணற்றுக்குள் இறங்கும் தீயணைப்பு வீரர்கள் இருவர் வருகை தந்தனர். அதே நேரத்தில் ராட்சத கிரேனும் அங்கு வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து ராட்சத கிரேன் உதவியுடன் இரண்டு தீயணைப்பு வீரர்களும் கிணற்றுக்குள் இறங்கினர். கிணற்றுக்குள் இறங்கி வெளியே வந்த இருவரும் கிணற்றுக்குள் கார் பாதி நிலை சகதியில் மூழ்கியுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து கிரேன் உதவியுடன் கிணற்றுக்குள் விழுந்த வேன் மீட்கப்பட்டது.

    ஆனால் வேனுக்குள் 4 பெரியவர்கள் உடல் மட்டுமே இருந்தது. குழந்தையின் உடல் கிணற்றுக்குள் சிக்கி கொண்டது. காரில் பயணம் செய்து உயிரிழந்தவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் கிணற்றுக்குள் வேன் விழுந்ததும் குழந்தை காரில் இருந்து கீழே விழுந்துள்ளது.

    உள்ளே அனைவரும் ஐந்து பேரும் சடலமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதில் பெரும்பாலானோர் சீட் பெல்ட் அணிந்தபடி இருந்தனர். கிணற்றுக்குள் இருந்து வெளியே வர முடியாத நிலையில் அவர்கள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

    அனைவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    Post Views: 199
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    June 2, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (301)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.