Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணத்தில் அமைச்சர் செய்த செயலால் நெகிழ்ந்து போன மக்கள்! வியாபாரம் மந்தமாக உள்ளது எனக் கூறிய கீரை வியாபாரி உடனே அனைத்து கீரைகளையும் வாங்கிய அமைச்சர் வினோத்ரவி

    August 2, 2026

    கீழக்கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

    August 2, 2026

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home»தமிழ்நாடு»மாவட்ட செய்திகள்»வரதட்சணை கொடுமை
    மாவட்ட செய்திகள்

    வரதட்சணை கொடுமை

    SahabudeenBy SahabudeenJuly 19, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    புகார்: காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்

    தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகள் தங்கப்பிரியா (32). பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரி. இவருக்கும், மதுரை காதக்கிணறு செந்தில்குமரன் மகன் பூபாலனுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பூபாலன் மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிகிறார்.

    தங்கப்பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 7 வயதிலும், 5 வயதிலும் இரு மகன்கள் உள்ளனர். இத்தம்பதியரின் குழந்தைகளுக்கு காதணி விழாவின்போது, இருவருக்கும் தலா 5 பவுன் நகைகள் போடுமாறு தங்கப்பிரியாவின் பெற்றோரிடம் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பூபாலனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் பூபாலன் மனைவியை தாக்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட தங்கப்பிரியா தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிசிக்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும், தனது மனைவியை கொடுமைப்படுத்தியது குறித்து பூபாலன் தொலைபேசியில் அவரது தங்கையிடம் பேசி பகிர்ந்த ஆடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் தங்கப்பிரியாவின் பெற்றோர் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், “தனது மகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    இப்புகாரின் அடிப்படையில் கணவர் பூபாலன், விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஆய்வாளராக பணியாற்றும் அவரது பூபாலனின் தந்தை செந்தில்குமரன், தாய் விஜயா, தங்கை அனிதா ஆகியோர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கணவர் பூபாலன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகினர். தொடர்ந்து ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. பாலசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில், வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் பூபாலனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    Post Views: 400
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணத்தில் அமைச்சர் செய்த செயலால் நெகிழ்ந்து போன மக்கள்! வியாபாரம் மந்தமாக உள்ளது எனக் கூறிய கீரை வியாபாரி உடனே அனைத்து கீரைகளையும் வாங்கிய அமைச்சர் வினோத்ரவி

    August 2, 2026

    கீழக்கொட்டையூரில் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

    August 2, 2026

    பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு

    August 2, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (393)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.