கடன் தொகையைத் திருப்பித் தருமாறு கேட்டதே காரணமாக, ஒரு குடும்பத்தினர் வீடு புகுந்து தம்பதியினரைத் தாக்கிய சம்பவம் அமைதி பூங்காவான கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவப் பின்னணிகும்பகோணம் காந்தியடிகள் சாலையில் வசிக்கும் செந்தில்குமார்–சரண்யா தம்பதியினரின் தலைமையில் மகளிர் சுய உதவிக் குழு மூலம், ஐந்து ஆண்டுகளுக்கு முன் நல்ல பழக்கவழக்கத்தில் இருந்த அண்டை வீட்டாரான ராஜாமணி–ரேவதி தம்பதியினருக்கு வீட்டுத் தேவைக்காக ரூ.2 லட்சம் கடன் கொடுத்துள்ளனர். கடன் தொகையை மகளிர் குழுவுக்கு நேரடியாகச் செலுத்துவதாக அப்போது கடன் பெற்றவர்கள் வாய்மொழி உறுதி அளிக்கப்பட்டாலும், அது நிறைவேறவில்லையாம். இதனால் மனம் உடைந்த சரண்யா தனது கணவர் வருமானத்தில் வரக்கூடிய சொந்தப் பணத்திலேயே மாதந்தோறும் தவணை செலுத்தி வந்ததாக தெரிய வருகிறது. இதுவரை ரூ.1.20 லட்சம் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளதாம்.பின்னர் ராஜாமணி குடும்பத்தினர் ஊரை விட்டு இடம்பெயர்ந்ததுடன், கணவர் வெளிநாட்டில் பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறியும், குடும்ப கஷ்டமாக இருக்கிறது எனவும் கூறி கடன் தொகையைத் தட்டிக் கழித்து வந்துள்ளார் ரேவதி, வருடங்கள் கடந்ததுதிருமண மண்டபத்தில் தொடங்கிய மோதல்இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி சம்பவத்தன்று ராஜாமணி–ரேவதி தம்பதியினரின் மகளுக்கு கும்பகோணத்தில் உள்ள பிரபல ஆடம்பர மஹாலில் திருமணம் நடைபெறவிருந்ததை அறிந்த செந்தில்குமார், சனிக்கிழமை இரவு நேரடியாக மண்டபத்திற்குச் சென்று ராஜாமணியிடம் கடன் தொகையைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். “வீட்டுக்கு செல்லுங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம்” எனக் கூறி அவரை மண்டபத்திலிருந்து அனுப்பிவிட்ட எதிர் தரப்பினர், உடனடியாக ராஜாமணியின் மகன் ஜெகன் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் காரில் செந்தில்குமார் வீட்டிற்கு சனிக்கிழமை இரவு வந்துள்ளனர். வாக்குவாதம் வன்முறையில் முடிந்துள்ளது அருவருக்கத்தக்க வார்த்தையில் பேசிய எதிர் தரப்பினர் ஜெகன் என்பவர் சரண்யாவைத் தாக்கி உதைத்ததுடன், தடுக்க முயன்ற செந்தில்குமாரையும் அடித்து தள்ளி காயப்படுத்தியுள்ளார். பலத்த காயமடைந்த தம்பதியினரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.காவல்துறை மீது கடும் விமர்சனம்சம்பவம் தொடர்பாகப் புகார் பெற்றுக் கொண்ட போலீசார், மூன்று நாட்கள் கடந்தும் இதுவரை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பெண்ணைத் தாக்கி மானபங்கப்படுத்திய ஜெகன் மற்றும் ராஜாமணியைக் கைது செய்யாமல் காவல்துறை மெத்தனப் போக்கில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு பெண்ணை அடித்து உதைத்து சேலையை கிழித்து மான பங்கம் படுத்திய ஜெகன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட சரண்யா, துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி ஷர்முவை மருத்துவமனையில் இருந்து சென்று நேரில் சந்தித்துப் புகார் அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்கப்படும் என டி எஸ் பி அவர்கள் உறுதி அளிக்கப்பட்ட போதிலும், மேற்கு காவல் நிலைய போலீசாரால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் தரப்பு தெரிவிக்கிறது.தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இச்சம்பவத்தில் தலையிட்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வாரா? நாங்கள் உங்கள் நண்பன் எனக் கூறிக் கொள்ளும் தமிழ்நாடு காவல்துறை இந்த விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது? என்பதே பாதிக்கப்பட்டோர் மற்றும் அமைதி பூங்காவன கும்பகோணத்தில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.செய்தியாளர் அ.மகேஷ்
