நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 64-வது ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை உரை ஆற்றினார். அவர் பேசுகையில், ஆசிரியர் தினம் கொண்டாடப் படும் விதம், ஆசிரியர்களின் சிறப்பு, மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு குறித்து எடுத்துக் கூறினார்.இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். பாடகர் குழுவினர் வாழ்த்து பாடல்கள் பாடினர். பட்டதாரி தமிழ் ஆசிரியர் வின்ஸ்டன் ஜோஸ்வா மற்றும் பட்டதாரி அறிவியல் ஆசிரியை ஜெயந்தி சுபாஷினி ஆகியோர் ஆசிரியர் தினம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினர். பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்க்கு பரிசு வழங்கப்பட்டது. 9ம் வகுப்பு மாணவர் ஜெய்சன்,10ம் வகுப்பு மாணவர் ஜெர்வின் மற்றும் 12ம் வகுப்பு மாணவர் முத்துராமன் ஆகியோர் மாணவர்களின் சார்பில் ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் நன்றி கூறினார். தமிழ் ஆசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர் பாராட்டினார்.
