Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » விசிக வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது ஜி ஜி சிவா அறிக்கை
    மாவட்ட செய்திகள்

    விசிக வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது ஜி ஜி சிவா அறிக்கை

    SahabudeenBy SahabudeenSeptember 6, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    விசிக வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது ஜி ஜி சிவா அறிக்கை

    தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜி ஜி சிவா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

    தமிழகத்தில் எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களும் சிறுபான்மை மக்களும் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் தனது முதல் குரலாக ஒலித்து அந்த மக்களை அரவணைத்து செயல்படுவதில் முதன்மையான இடத்தில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து பாஜக சங் பரிவார் சங்கங்கள் எப்படியாவது எஃகு கோட்டையாக இருக்கும் விசிக
    வை ஒடுக்க வேண்டும் என்கின்ற முனைப்போடு பல அரசியல் இடைத்தரகர்களை கொண்டு விசிக தலைவர் தோழர் திருமாவை குறைத்து மதிப்பீட்டு பொதுத்தளத்தில் அவர் மீது அவதூறு பரப்பியும் அந்த கட்சியைச் சார்ந்த முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் கடைக்கோடி தொண்டர்கள் வரை அவர்கள் ஏதோ ஒரு ரவுடிகள் போன்றும் குண்டர்கள் போன்றும் தவறாக சித்தரித்து ஒரு வெம்பத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் அதன் அடிப்படையில் தான் புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி யையும் விசிக தலைவருக்கும் மற்ற முன்னணி பொறுப்பாளர்களுக்கும் எதிராக அவதூறு பரப்பும் செயலை செய்து வர நியமனம் செய்திருக்கிறார்கள் RSS மற்றும் பாஜக அமைப்பினர் அதன் அடிப்படையில் தொடர்ந்து செல்லும் இடமெல்லாம் பத்திரிகை மற்றும் ஊடகம் வாயிலாக ஒரு மூத்த அரசியல்வாதி என்கின்ற மதிப்பு கூட கொடுக்காமல் வீசி கா தலைவருக்கு எதிராக நாக்கூசும் வகையில் பேசி வருகிறார் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் அதில் ஒரு சில தொண்டர்கள் தன் தலைவருக்கு எதிராக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் நீதியை கேட்க தமிழக டிஜிபி அலுவலகம் வாயிலில் நின்றிருந்த ஏர்போர்ட் மூர்த்தியிடம் பேசும் போது கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது டிஜிபி அலுவலகம் வாயில் என்று கூட பார்க்காமல் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் தனது கையில் வைத்திருக்கும் கத்தி எடுத்து கொலை முயற்சி செய்ய விசிக தொண்டர்களை நோக்கி செல்லும் காட்சி அனைத்து ஊடகங்களிலும் பதிவாகி இருக்கிறது நிலைமை இப்படி இருக்க உடனே இதை வைத்து அரசியல் செய்ய தமிழக எதிர்க்கட்சிகள் பாஜக சங் பரிவார் சங்கங்கள் ஏதோ தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்கின்ற பிம்பத்தைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் மேலும் இதை வைத்து விசிக தலைவரை இழிவுபடுத்தும் விதமாகவும் ஆளுநர் வரை இந்த விவகாரத்தை கொண்டு சென்று விசிக கட்சியை தடை செய்ய வேண்டுமென திட்டம் தீட்டப்படுவதாக தொடர்ந்து வருகின்ற தகவல்கள் நமக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது இந்த தருணத்தில் தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிலேயே விசிக தலைவர் தோழர் திருமா வையும் விசிக கட்சியையும் ஒடுக்க எந்த கொம்பனாலும் முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ஏனென்றால் விசிக ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் விசிக மாபெரும் ஒரு மனிதநேய இயக்கம் என்பதனை மீண்டும் எதிர்க்கட்சிகளுக்கு பதிவிட கடமைப்பட்டுள்ளேன் இவ்வாறு ஜி ஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்

    Post Views: 568
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026

    கும்பகோணத்தில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.