Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பூச்சாண்டி வேலை வேண்டாம்… தேர்தலில் மோதி பார்ப்போம் -திமுகவுக்கு விஜய் சவால்
    மாவட்ட செய்திகள்

    பூச்சாண்டி வேலை வேண்டாம்… தேர்தலில் மோதி பார்ப்போம் -திமுகவுக்கு விஜய் சவால்

    SahabudeenBy SahabudeenSeptember 20, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நாகை புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது சனிக்கிழமைகளில் பிரசாரம் மேற்கொள்வது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அவர் பேசியதாவது;

    அதென்ன சனிக்கிழமைகளில் பிரசாரம் என விமர்சனம் செய்தார்கள். முக்கியமாக உங்கள் வேலைக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக விடுமுறை நாட்களில், ஓய்வு நாட்களில் வருவதுதான் திட்டம். அரசியல் சிலருக்கு நாம் ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா.. அதனால்தான் ஓய்வு நாட்களில் திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகிறோம்.

    ஆனால் உங்களை பார்க்க வரும்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். உங்களிடம் நான் பேசுவதே 3 நிமிடங்கள்தான். அப்போது அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது என்கிறார்கள். அரியலூரில் கரண்ட்டை கட் செய்கிறார்கள். பிரதமரோ, உள்துறை மந்திரியோ வரும்போது இதுபோல் கட்டுப்பாடுகள் விதிப்பீர்களா? நீங்கள்தான் மறைமுக உறவுக்காரர்கள ஆயிற்றே..

    பஸ்சுக்குள்ளேயே இருக்க வேண்டும். கையை உயர்த்தக்கூடாது., மக்களை பார்த்து சிரிக்கக்கூடாது என்கிறீர்கள். மக்களிடமே கேட்கிறேன். நான் உங்களை பார்க்கக்கூடாதா? உங்கள் குறைகளை கேட்கக்கூடாதா? உங்களிடம் பேசக்கூடாதா? கொள்ளையடித்து வந்த உங்களுக்கு இவ்வளவு இருக்குமென்றால், சொந்தமாக உழைத்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும். மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களை தேர்ந்தெடு தருகிறீர்கள். நான் மக்களை பார்க்கக்கூடாது, பேசக்கூடாது என நினைக்கிறீர்கள்.

    நான் ஒன்றும் தனி ஆள் கிடையாது., மாபெரும் பெண்கள் படையின் சகோதரன், மாபெரும் இளைஞர்களின் சகோதரன். 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் விட்டுவிட்டு நேரடியாக கெத்தாக தேர்தலுக்கு வாருங்கள். கொள்ளையடிக்கிற நீங்களா.. இல்லை மக்கள் வீட்டில் ஓட்டாக இருக்கும் நானா என பார்த்துவிடலாம்..”

    இவ்வாறு அவர் பேசினார்.

    Post Views: 391
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026

    கும்பகோணத்தில் அம்பேத்கர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

    May 27, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.