இந்திய அரசியல் சாசன தினம் மற்றும் தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி கே.வி.கே ஹாலில் வைத்து சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் வேர்ல்ட் சிட்டிசன் டாக்டர் ஜோசப் தலைமையில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள செங்குளம் பத்திரிகையாளர் பிரபாகரன் என்பவருக்கு BEST SOCIAL SERVICE STATE AWARD – 2025 ஐ மாவட்ட முன்னாள் நீதிபதி கணேசன், பள்ளி முதல்வர் டாக்டர் நாசியன் கிரிகோரி, திருச்சி கல்லூரி பேராசிரியர் டாக்டர் சம்பத், சென்னை வழக்கறிஞர் டாக்டர் கமலா, மகா எஜுகேஷனல் சாரிடபிள் டிரஸ்டி கல்லிடை மகாராஜன் ஆகியோர் வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பல மாவட்டத்தில் இருந்து வந்திருந்த உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் கூட்டமைப்பின் தேசிய தலைவி டாக்டர் அமலோர் பவராணி நன்றி கூறினார்.
2025ம் ஆண்டுக்கான சிறந்த சமூக சேவகர் என்பதற்கான சிறந்த விருதை பெற்ற பத்திரிகையாளர் பிரபாகரனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

