Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுள்ள கு. இளங்கோவன் அவர்களை, தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ். முகமது இப்ராஹிம் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தஞ்சாவூரில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, கு. இளங்கோவன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்திய கே.எஸ். முகமது இப்ராஹிம், மாவட்ட வளர்ச்சி மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்பட்டு, மக்கள் நல நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.இந்த நிகழ்வில், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் ஹ. முகமது அசாருதீன் உடனிருந்தார்.செய்தியாளர் அ.மகேஷ்

Must Read