Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
    மாவட்ட செய்திகள்

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    SahabudeenBy SahabudeenJuly 31, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 123 (நிதி (A), நாள்: 24.06.2026)-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை மாநகரம், மருங்குளம், மாரியம்மன் கோவில், பூதலூர் உள்ளிட்ட கிளைகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதியர்கள், தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, அரசாணைக்கு எதிராக முழக்கமிட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு மாரியம்மன் கோவில் கிளைத் தலைவர் ஜெ. ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மருங்குளம் கிளைத் தலைவர் வி. பன்னீர்செல்வம், மாரியம்மன் கோவில் கிளைச் செயலாளர் ஆர். வெங்கடராஜி, மாவட்டப் பொருளாளர் எம். அறிவழகன், கரந்தை கிளைச் செயலாளர் வி. சாமிநாதன், பூதலூர் கிளைத் தலைவர் ஆர். கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறப்படும் அரசாணை எண் 123-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, அவர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட பிரதிநிதி கோ. ராஜமன்னார் நன்றி கூறினார்.செய்தியாளர் அ.மகேஷ்

    Post Views: 5
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (388)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.