தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவரும் திமுக தோழமை கட்சியுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
இந்திய நாடே திரும்பி பார்க்கின்ற வகையில் சமூக நீதியை கையாண்டு திராவிட மாடலை முன்னெடுத்து ஆட்சி செய்து வரும் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை தீட்டி வருவதை தமிழ்நாடு முழுவதும் மக்கள் வரவேற்பு செய்து வருகிறார்கள் பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் திட்டம் ஆகட்டும் பெண்களுக்கான மகளிர் இலவச பேருந்து பயணமாகட்டும் உயர்கல்வி படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயாகட்டும் குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் மதக் கலவரங்கள் ஏற்படாத வண்ணம் பாஜக சங் பரிவார் சங்கங்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக வழிநடத்தி வருவதும் மற்ற மாநிலத்தவர்கள் கூட தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதும் வெளிநாடு முதலீட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதும் தமிழ்நாடு அரசுக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில் இருப்பதினால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் இப்பொழுது ஆட்சியில் இருக்கும் திமுக ஆட்சியே தொடர வேண்டும் என்றும் கிட்டத்தட்ட 200 சட்டமன்ற தொகுதிகளில் பெரும் வெற்றி திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க தயாராகி வருவதும் தொடர்ந்து மாவட்டந்தோறும் தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தருணமெல்லாம் மக்களின் நீரோட்டமாக மனதில் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது தமிழகத்தின் முன்னணி பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக எடுக்கக்கூடிய கருத்துக்கணிப்பிலும் இது எதிரொலிப்பது அனைவரும் அறிந்ததே 2026 இல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக மற்றும் சங் பரிவார் சங்கங்கள் பல கலவரங்களை நிகழ்த்தி எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்கின்ற கனவை தமிழ்நாடு காவல்துறையும் தமிழ்நாடு அரசும் தொடர்ந்து தூள் தூளாக சிதறடித்து மக்களை பாதுகாத்து வருவது மேலும் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்போடு இருப்பதற்கு ஒரு சாட்சியாக அமைகிறது இந்திய அளவில் பல மாநிலங்களில் முதலமைச்சர்கள் ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களின் மக்கள் பணி தனித்துவமாகவும் முதன்மையாகவும் தெரிவது கூடுதல் பலம் மேலும் மற்ற மாநிலங்களில் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருப்பதும் இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக வளர்ச்சி பெறுவதும் மக்கள் 2026 இல் மீண்டும் திமுகவிற்கு வாக்களிக்க முன் வந்திருப்பது இதுவெல்லாம் கூடுதல் காரணமாக அமைந்திருக்கிறது ஆகவே வருகின்ற 2026 இல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்று திமுக ஆட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் மக்களுக்கான நல்லாட்சியை தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வழங்குவார் வெல்லட்டும் தமிழ்நாடு ஆளட்டும் திமுக என தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜிஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்


