கடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீரென மின்விநியோகம் தடைபட்ட நிலையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
மின்சாரம் இல்லாததால் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
தரைத்தளம் வழியாகச் செல்லும் வயர் துண்டிக்கப்பட்டதால் 4 மணி நேரமாக மின்சாரம் தடைபட்டதாகவும், அதனை சரி செய்த பிறகு நிலமை சீரானதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


