Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    May 30, 2026

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்
    தமிழ்நாடு

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ் லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    SahabudeenBy SahabudeenMay 30, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு துரோகம் ஜி ஜி சிவா கண்டனம்

    தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் இளம் பத்திரிகையாளர் ஜி ஜி சிவா தமிழ்நாடு அரசுக்கு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைகள் கூறி இருப்பதாவது

    நாடெங்கும் பக்ரீத் தியாக திருநாளை கொண்டாடுவதற்கு இஸ்லாமிய உறவுகள் மிக ஆவலாக இருந்தபோது சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் பொது இடங்களில் வீதிகளில் மாடுகளை அறுக்க கூடாது என தீர்ப்பு வழங்கியிருக்கிறது இத்தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டிய த வெ க தமிழ்நாடு அரசு வாய் மூடி மௌனியாக கடந்து சென்றிருப்பது மத நல்லிணக்கத்தை போற்றி வாழும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இஸ்லாமிய உறவுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் சிறுபான்மை மக்களின் அரசை நடத்துவதாகவும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்றும் பேசினார் ஆனால் பக்ரீத் தியாகத் திருநாள் அன்று உயர் நீதிமன்ற நீதி அரசர் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பது போன்று ஒரு தீர்ப்பை வழங்கியதை விஜய் அவர்கள் கண்டிக்காததும் அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மூலமாக மேல்முறையீடு செய்யாததும் முதலமைச்சரின் சாயம் வெளுத்திருப்பதாகவே தோன்றுகிறது மேலும் பொதுவாக வட மாநிலங்களில் மதத்தை வைத்து இஸ்லாமிய உறவுகளை மாற்றான் தாய் பிள்ளையாக மத்திய பாஜக அரசும் ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்களும் நடத்தி வருவதும் இந்த நாட்டிற்காக சுதந்திரத்திற்காக போராடி லட்சோப லட்சம் இஸ்லாமிய உறவுகள் தனது உயிர்களை தியாகம் செய்த அவர்களை இந்துத்துவா சக்திகள் துன்புறுத்தி வருவது அனைவரும் அறிந்ததே ஆனால் தமிழ்நாடு சமூக நீதி மண் திராவிட மண் இங்கே அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு இருக்கக்கூடிய மண் என பன்முகம் கொண்ட இந்த மாநிலத்தில் வடக்கு போன்று இங்கே இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பி வழங்குவதும் அதை தமிழ்நாடு அரசு கடந்து செல்வதும் கூர்ந்து கவனித்து பார்த்தால் பாஜக ஆர் எஸ் எஸ் நிழலின் ஆட்சியாக முதலமைச்சர் விஜய் அவர்கள் செய்து வருவது போன்று தோன்றுகிறது இது தமிழ்நாட்டிற்கு அழகு இல்லை என்பதனை ஆளும் பார்க்கவும் நினைத்து பார்க்க வேண்டும் அது மட்டுமல்ல இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது என்று சொல்லி அரசியல் செய்து வரும் தமிழ்நாடு அரசு கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் விசிக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதற்கு ஒரு சிறு கண்டனம் கூட பதிவு செய்யாமல் வேடிக்கை பார்ப்பது இத்துணை வருடங்களாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது போன்று அரசியல் செய்ததெல்லாம் கபட நாடகம் என இதில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது இனி இவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற அரசியல் செய்ய முயற்சித்தால் தமிழ்நாட்டு மக்களோடு இஸ்லாமிய உறவுகள் இந்த கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதையும் இந்த தருணத்தில் கூறிக் கொள்கிறேன் மேலும் தமிழக வெற்றி கழகத்தில் இஸ்லாமியர்களும் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள் அவர்களும் ஒரு துளி கூட வாய் திறக்காதது இஸ்லாமிய மதத்திற்கும் இறைவனுக்கும் செய்யக் கூடிய மிகப் பெரிய துரோகம் என உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதனை அவர்களுக்கும் தெரிவிக்க கடமை பட்டுள்ளேன் தமிழ்நாட்டில் இது போன்று இஸ்லாமியர்கள் மீது வன்மத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசும் நீதி துறையும் செயல்படாமல் இருக்க கோரிக்கை வைக்கிறேன் இது தொடரும் என்றால் தமிழ்நாடு முழுவதும் தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் சார்பாக ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டங்களில் முன்னெடுக்கும் என்பதையும் பதிவு செய்கிறேன் உயர் நீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு எதிராக வழங்கி இருக்கக்கூடிய இத்தீர்பினை எதிர்த்து விரைவில் மேல்முறையீடு செய்யும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு ஜிஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்

    Post Views: 126
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை, வணிகப் பொருட்கள் விலை தொடர் உயர்வுக்கு எதிராக கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    May 30, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026

    கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”

    May 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,069)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (195)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (300)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.