Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
    மாவட்ட செய்திகள்

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    SahabudeenBy SahabudeenJuly 29, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மாம்பழ மண்டலமாக அறிவிக்கவும், மாங்காய்க்கு ஆதார விலை வழங்கவும் வலியுறுத்தல்

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாங்காய்களை உடைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம், கிருஷ்ணாபுரம், அழகாபுதூர், மலையப்பநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், தற்போது மாங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து, மாமரங்களையே வெட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.எனவே, கும்பகோணத்தை மாம்பழ மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும், மேலும் மாங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும், கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால், அவற்றை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கும் அரவை ஆலைகளுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.அத்துடன், ஏரி, குளங்கள் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், பாபநாசம் வட்டம் 91 புத்தூர் கிராம வருவாய் எல்லைக்குட்பட்ட வடவாறு பிரிவின் பொதுப்பணித்துறை வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெற்பயிர்கள் சேதமடைகின்றன. எனவே, அந்த வாய்க்காலை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாங்காய்களை உடைத்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.எம். ராமலிங்கம், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் பி.எம். காதர்உசேன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், குரு. சிவா, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் க. சுந்தரராஜன், மாவட்ட நிர்வாகிகள் வே. முரளி, ஆர். பழனி, எம். வீரமணி, ஆர். ஆரோக்கியதாஸ், சி. சின்னதுரை, ஆர். பிரவீன்ராஜ், எஸ். விக்னேஸ்வரன், ஏ. சகாதேவன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.செய்தியாளர் அ.மகேஷ்

    Post Views: 4
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026

    தூத்துக்குடி:

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.