நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் திறந்து வைத்தார்.
இன்று முதல் 124 நாட்கள் திறக்கப்படும் தண்ணீரால் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் நேரடி மடை மூலம் விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், கோடாரங்குளம் உட்பட்ட பல கிராமங்களில் 10265 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றது.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாபுரம் கிறிஸ்டோபர், நாங்குநேரி ரெட்டியார் பட்டி நாராயணன், தமிழக வெற்றி கழக நெல்லை தெற்கு மாவட்ட செயலாளரும், தலைமை நிர்வாக குழு உறுப்பினருமான ராஜகோபால், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

