Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள டிலிமன், கியூசன் சிட்டியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில், அமைதி மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான சர்வதேச சட்ட மாநாடு ஜூலை 24 முதல் 27 வரை நடைபெற்றது.இந்த மாநாட்டில் ரஷ்யா, சீனா, இலங்கை, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், வட கொரியா டி.பி.ஆர்.கே. தென் கொரியா, மலேசியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஜப்பான், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், சட்ட அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் முற்போக்குச் சட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.மாநாட்டில் உலக அமைதி, சர்வதேச பாதுகாப்பு, மனித உரிமைகள், நாடுகளுக்கிடையேயான சட்ட ஒத்துழைப்பு, நீதித்துறையின் பங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் பாரதி அம்பிகாபதி மாநாட்டில் பங்கேற்று, இந்தியாவின் சட்டப் பார்வை, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சர்வதேச அளவில் சட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.மேலும், உலக அமைதி மற்றும் நீதியை நிலைநிறுத்துவதில் சர்வதேச சட்ட அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானது என்றும், நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் அனுபவப் பரிமாற்றம் எதிர்கால சட்ட முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.செய்தியாளர் அ.மகேஷ்

Must Read