பரந்தூர் விமான நிலையத்தின் அவசியம் குறித்து முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து விளக்கவும், அறிக்கை அளிக்கவும் விமான நிலைய ஆணையம் திட்டமிட்டு ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாள் ஒன்று சராசரியாக 60 ஆயிரம் பயணிகளும், 400 விமானங்களும் வந்து செல்லும் சென்னை விமான நிலையத்தில், அதிக பயணிகள் செல்லக்கூடிய பெரிய விமானங்கள் தரையிறங்க கூடிய வசதி இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் அதிக சரக்கு பரிமாற்றம் மற்றும் அதிக அளவிலான பயணிகளை கையாளும் திறன் என்பதும் சென்னை விமான நிலையத்தில் இல்லை என்றும், தொலைநோக்கு திட்டமாக பார்க்கும் பொழுது சென்னைக்கு அதிக பயணிகளை கையாளக்கூடிய மற்றும் சரக்கு பரிமாற்றத்தை மேம்படுத்தக்கூடியவகையில் புதிய விமான நிலையம் அவசியமாக உள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதற்காகத்தான் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு ஆர்வம் காட்டாத சூழலில் விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள்தமிழக முதலமைச்சரை சந்தித்து அறிக்கை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

