Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை வீசி சென்ற டிரைவர்..! அடித்து காலை உடைத்த மக்கள்..! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!

    June 5, 2026

    நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

    June 5, 2026

    கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    June 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை வீசி சென்ற டிரைவர்..! அடித்து காலை உடைத்த மக்கள்..! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!
    தமிழ்நாடு

    பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை வீசி சென்ற டிரைவர்..! அடித்து காலை உடைத்த மக்கள்..! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!

    SahabudeenBy SahabudeenJune 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி அருகே அமைந்துள்ள கல்மந்தை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தனது அக்காவான திருநங்கையை பார்க்க வீட்டிற்கு அருகில், திருநங்கைகள் ஒன்றாக வசித்து வந்த வீட்டிற்கு கடந்த மூன்றாம் தேதி மாலை 6 மணி அளவில் சென்றுள்ளார்.

    சிறுமியை சாலையில் வீசி சென்ற டிரைவர்..!

    சிறுமியை ஒருவர் காரில் ஏற்றிச்செல்வதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். பின்னர், ஒரு மணி நேரத்திற்கு பின்னர், சிறுமியை போர்வையால் சுற்றியபடி, சாலையில் தூக்கி வீசி சென்றதாக சொல்லப்படுகிறது. இதனை கண்டு பதறியஅங்கிருந்தவர்கள், உடனே சிறுமியை தூக்கியபோது, அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும், உடலில் காயங்களோடு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

    சிறுமிக்கு நடந்தது என்ன?

    அங்கிருந்தவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனையிட்டபோது சிறுமியை காரில் இருந்து வீசி சென்ற நபர், திருங்கையின் வீட்டின் அருகே நின்றது தெரியவந்தது. 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர் மாரிசெல்வன் என்பதும், கார் டிரைவரான மாரிசெல்வன் வழக்கமாகஎன்பதும், கார் டிரைவரான மாரிசெல்வன் வழக்கமாக திருங்கைகளை காரில் சிவகங்கை போன்ற பகுதிகளுக்கு அழைத்து சென்று, வீட்டிற்கு அழைத்து வருவதை வாடிக்கைக்காக வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

    அன்று, மாரிசெல்வன், சிறுமியின் அக்காவான திருநங்கையை காரில் அழைத்து செல்ல வந்தது தெரியவந்தது. அப்போது, 16 வயது சிறுமியை பார்த்த மாரிசெல்வன், சிறுமியை காரில் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரலாம் எனக் கூறி சிறுமியை அழைத்து சென்று, சோடாவில் மதுவை கலந்து கொடுத்து, சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

    ஆத்திரத்தில் காலை உடைத்த பொதுமக்கள்..!

    உடனே, மாரிசெல்வனை பிடித்த அக்கம் பக்கத்தினர், ஆத்திரத்தில் அடித்து வெளுத்தனர்.அவர்கள்தாக்கியதில் மாரிசெல்வனுக்கு ரத்த காயம் ஏற்பட்டதோடு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் மயக்க நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும், அங்கிருந்தவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த மாரிசெல்வனை போலீசார் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கூட்டு பாலியல் வன்கொடுமை?

    சிறுமியை மாரிசெல்வன் மட்டும் இல்லாமல் இன்னும் சிலர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால்சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என காவல் துறையினர் மறுப்பு தெரிவித்து விளக்கம்அளித்துள்ளனர்

    சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல்..!

    இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பாக) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார்அவர்களுடன் சமாதான ) பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்துபோராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாரிச்செல்வன் மீது ஆள் கடத்தல், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Post Views: 62
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நாசரேத் மதுரம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

    June 5, 2026

    கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    June 5, 2026

    மதிமுகவினர் இனி வேறு சின்னத்தில் போட்டியிடக் கூடாது துரை வைகோ ஆவேசம்..!

    June 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,070)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (201)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (308)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.