Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் திருச்சியை சேர்ந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைக்க கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

    June 12, 2026

    மக்களால் புறம் தள்ளப்பட்ட” அரசியல் மகா நடிகன் ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழக வெற்றிக் கழக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டன அறிக்கை:

    June 12, 2026

    கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கோவில் நில பட்டா ஆவண குளறுபடி: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » 2 மனைவிகளையும் என்னுடன் அனுப்பி வையுங்கள்…’ அடம்பிடித்த வாலிபரால் அதிர்ச்சியடைந்த போலீஸ்
    தமிழ்நாடு

    2 மனைவிகளையும் என்னுடன் அனுப்பி வையுங்கள்…’ அடம்பிடித்த வாலிபரால் அதிர்ச்சியடைந்த போலீஸ்

    SahabudeenBy SahabudeenJune 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    குழந்தைகளின் எதிர்காலம் கருதி தனது கணவரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று சுமதி போலீசாரிடம் மன்றாடினார்.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி(வயது 28). வெல்டிங் வேலை பார்த்து வரும் இவருக்கு, சுமதி(26) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில் சடையாண்டிஅடிக்கடி தனது செல்போனில் யாருடனோ பேசி வந்ததாகவும், இது குறித்து சுமதி கேட்டபோது சடையாண்டி ஒழுங்காக பதில் சொல்லாததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சடையாண்டி திடீரென மாயமானார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து வடமதுரை காவல்நிலையத்தில் சுமதி புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தி சடையாண்டியை தீவிரமாகதேடினர். அப்போது சடையாண்டி புத்தூர் பிச்சம்பட்டியைச் சேர்ந்த நாகேஷ்வரி(வயது 21) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது

    நாகேஷ்வரியிடம் தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை சடையாண்டி மறைத்துள்ளார். மேலும், முதல் மனைவி சுமதிக்கு தெரியாமல் நாகேஷ்வரியை 2-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் சடையாண்டி வாழ்ந்து வந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில்தெரியவந்த நிலையில், இது குறித்து போலீசார் சுமதியிடம் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் காவல்நிலையத்திற்கு சடையாண்டி, நாகேஷ்வரி மற்றும் சுமதி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.அப்போது போலீசாரிடம் சடையாண்டி கூறுகையில், “எனது முதல் மனைவி சுமதி அடிக்கடி என்னுடன் தகராறு செய்து வந்தார். அதனால் நான் 2-வது திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 2 மனைவிகளுடனும் சேர்ந்து

    வாழ சம்மதம். எனவே 2 மனைவிகளையும் என்னுடன் அனுப்பி வையுங்கள். நான் இருவரையும் வைத்து கவனித்துக் கொள்கிறேன்” என்றார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் நாகேஷ்வரியும், “நான் சடையாண்டியுடன் வாழ விரும்புகிறேன். என்னை அவருடன் அனுப்பி வையுங்கள்” என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டார். அதே சமயம் சடையாண்டியின் முதல் மனைவி சுமதியோ, தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களின் எதிர்காலம் கருதி தனது

    கணவரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் மன்றாடினார்.

    இந்நிலையில் போலீசார் சடையாண்டியிடம், “முதல் மனைவி இருக்கும்போது 2-வது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் சிறை செல்ல வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தனர். அதோடு நாகேஷ்வரிக்கும் அறிவுரை கூறி அவரது பெற்றோருடன்அனுப்பி வைத்த போலீசார், சடையாண்டியிடம் அவரது முதல் மனைவி சுமதி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து வாழுமாறு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.இந்த சம்பவத்தால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Post Views: 1,068
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் திருச்சியை சேர்ந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைக்க கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

    June 12, 2026

    மக்களால் புறம் தள்ளப்பட்ட” அரசியல் மகா நடிகன் ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழக வெற்றிக் கழக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டன அறிக்கை:

    June 12, 2026

    கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கோவில் நில பட்டா ஆவண குளறுபடி: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,071)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (207)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (318)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.