Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் திருச்சியை சேர்ந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைக்க கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

    June 12, 2026

    மக்களால் புறம் தள்ளப்பட்ட” அரசியல் மகா நடிகன் ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழக வெற்றிக் கழக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டன அறிக்கை:

    June 12, 2026

    கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கோவில் நில பட்டா ஆவண குளறுபடி: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கோவில் நில பட்டா ஆவண குளறுபடி: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை
    மாவட்ட செய்திகள்

    கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கோவில் நில பட்டா ஆவண குளறுபடி: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

    SahabudeenBy SahabudeenJune 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கோவில் நில பட்டா ஆவண குளறுபடி: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி – ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கைகும்பகோணம்: ஜூன், 11-தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுவாமிமலை பேரூராட்சியில், பல ஆண்டுகளாக நத்தம் நிலங்களில் குடியிருந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஆவண குளறுபடி காரணமாக கோவில் நில பட்டா பிரச்சினையால் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், ஜமாபந்தி நிகழ்வில் உரிய நியாயம் கேட்டு மனு அளித்தனர்.சுவாமிமலை வருவாய் கிராமத்தில் உள்ள பல்வேறு சர்வே எண்களில் தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களுக்கு நத்தம் பட்டா வழங்கப்பட வேண்டிய நிலையில், சில கீழ்மட்ட வருவாய்த் துறை அதிகாரிகளின் தவறான ஆவண குளறுபடியால் அந்த நிலங்கள் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் பெயரில் பதிவுசெய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, பல ஆண்டுகளாக நத்தம் வீட்டுமனைகளில் சட்டப்பூர்வ ஆவணங்களுடன் வசித்து வரும் மக்கள், தங்களது வீடுகளுக்கான சட்டப்பூர்வ உரிமையை உறுதிப்படுத்தும் பட்டா பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டா கோரி மக்கள் தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம். எச். ஜவாஹிருல்லா இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நில நிர்வாக ஆணையரகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பலமுறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதுவரை முழுமையான விசாரணையை நிறைவு செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதற்கிடையில், சமூக ஆர்வலர்களான ஷாஜகான் மற்றும் ஷபானா ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், கோவில் பெயரில் நத்தம் பட்டா வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் கோவில் நிர்வாகத்திடம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருப்பது இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால், வருவாய்த் துறையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிர்வாக குளறுபடியால் பல ஆண்டுகளாக நத்தம் மனைப் பிரிவில் வாழ்ந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உண்மை நிலையை முழுமையாக ஆய்வு செய்து, கோவில் பெயரில் உள்ள பட்டாவை நீக்கி, தகுதியான மக்களுக்கு உரிய நத்தம் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜூன் 11ஆம் தேதி கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பசலி ஆண்டு 1435 வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்வில், வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னிலையில் அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து பல ஆண்டுகளாக நீடித்து வரும் பட்டா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.செய்தியாளர் அ. மகேஷ்

    Post Views: 163
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் திருச்சியை சேர்ந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைக்க கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

    June 12, 2026

    திருவிடைமருதூர் அருகே உள்ள கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம், தொடர் மின்தடையால் குருவை சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் கவலை தெரிவித்து மின்வாரிய அதிகாரியிடம் மனு

    June 10, 2026

    கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மூத்த தொழில்நுட்பப் பணியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,071)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (207)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (318)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.