Homeதமிழ்நாடுநிராகரித்த கனிமொழி.. சாதித்த தவெக அமைச்சர்.. ஓடக்கரை பஞ்சாயத்து முடிஞ்ச்..!

நிராகரித்த கனிமொழி.. சாதித்த தவெக அமைச்சர்.. ஓடக்கரை பஞ்சாயத்து முடிஞ்ச்..!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓடக்கரை கிராமத்தில் 6.5 லட்சம் மதிப்பீட்டில் கனிமொழி புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார் அப்போது, “பேருந்தே நிற்காத இந்த இடத்தில் பஸ் ஸ்டாப் எதற்கு ?” என்று கேள்வி எழுப்பிய பெண்கள், “இங்கு அனைத்து பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓடக்கரை கிராமத்தில் 6.5 லட்சம் மதிப்பீட்டில் கனிமொழி புதிய பயணிகள்நிழற்குடையை திறந்து வைத்தார் அப்போது, “பேருந்தே நிற்காத இந்த இடத்தில் பஸ் ஸ்டாப் எதற்கு ?” என்று கேள்வி எழுப்பிய பெண்கள், ” இங்கு அனைத்து பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

நம்ம முதல்வராக இருந்தால் ஒரு வாரத்திற்குள் செய்து கொடுத்திருப்பேன்”என்று கூறிய கனிமொழி, பெண்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டு காரில் ஏறிச் சென்றார்

இப்பவும் திமுககாரர் தானே இங்க எம்.எல்.ஏவாக இருக்கிறார்” என்று பெண்கள் ஆதங்கப்பட்ட நிலையில், நின்று குறை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் தொகுதி எம்.எல்.ஏஅனிதா ராதாகிருஷ்ணனும் கூட்டத்தோடு நழுவிச்சென்றார்

பெண்களின் ஆதங்க குரல் குறித்து தவெகவினர் மூலம் தகவல் அறிந்து அடுத்த சில மணி நேரங்களில் அங்கு வந்த மீன் வளத்துறை அமைச்சர் ஸ்ரீ நாத், அங்கு அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையை பார்வையிட்டார்

கனிமொழியிடம் கோரிக்கை வைத்த பெண் தனது ஆதங்க குரலையும் கோரிக்கையும் அமைச்சர் ஸ்ரீநாத்திடம் தெரிவித்தார்.

உடனடியாக நடவடிக்கை உறுதி மேற்கொள்வதாக அளித்த அமைச்சர் ஸ்ரீ நாத், அரசு போக்குவரத்து கழகங்களில் மேலாளர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் பேசி அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் ஓடக்கரை கிராமத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்தார்

அதனை உறுதிப்படுத்தும் விதமாகதிருச்செந்தூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி பயணித்த அமைச்சர் ஸ்ரீ நாத் ஓடக்கரை பேருந்து நிறுத்தத்தில் தங்கள் சகாக்களுடன் வந்து இறங்கினார்.

தங்கள் கோரிக்கை அடுத்த சில மணி நேரங்களில் நிறைவேற்றப்பட்டதால் ஓடக்கரை பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.அதே நேரத்தில்தற்போதைய தமிழகமுதல் அமைச்சர்விஜய்யின் படம்இல்லாமல் முன்னாள்முதல் அமைச்சர்மு.க.ஸ்டாலின்,கனிமொழி, உதயநிதி படங்கள் வைக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர் என்றும் அமைச்சர் ஸ்ரீ நாத் தெரிவித்தார்.

தங்கள் ஊரில் பேருந்து நிற்க வேண்டும் என்று உரக்க குரல் எழுப்பிய பெண்ணின் ஆதங்கத்துக்கு சிலமணி நேரங்களில் தவெகஅமைச்சர் ஸ்ரீ நாத் தக்கதீர்வு கொடுத்துள்ளார்.

Must Read