தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருவலஞ்சு ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருபவர் மாதவன் .இவர் குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற போது எதிர்பாராத விதமாக குடிசை வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு குடிசை வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது. வீட்டிலிருந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் எரிந்துள்ளது. எனவே தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
