மனுராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள பாலமதி கிராமத்தைச் சேர்ந்த செல்வி மற்றும் பாபு ஆகியோர், தாங்கள் நடந்து செல்ல பயன்படுத்தி வரும் பாதைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம். சுகுமாரை நேற்று மாலை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில், நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் நடைபாதையில் தற்போது பிரச்சினை நிலவி வருவதால், பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் பாதையை மீட்டெடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மனுவைப் பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து, சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
பாதை பிரச்சினைக்கு தீர்வு கோரி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமாரிடம் மனு
Related Posts
Add A Comment

