கும்பகோணம் மகாமகக் குளத்தைச் சுற்றியுள்ள வியாபாரிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத்ரவி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து, அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.அப்போது, குடும்பத்துடன் கீரை விற்பனை செய்து வந்த இளம் வியாபாரி ஒருவர், இன்னைக்கு வியாபாரம் மிகவும் மந்தமாக உள்ளது எனவும் அறுவடை செய்த கீரைகள் வீணாகுவதாகவும் இதனால் இன்றைய தினம் வருவாய் இன்றி தவிப்பதாக அமைச்சரிடம் தெரிவித்தார்.இதைக் கேட்ட அமைச்சர் வினோத்ரவி, தாமதிக்காமல் அந்த வியாபாரியிடம் இருந்த அனைத்து கீரைக் கட்டுகளையும் வாங்கினார். பின்னர், அவற்றை மகாமகக் குளம் பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு வழங்கியதுடன், கீரைகளுக்கான முழுத் தொகையையும் வியாபாரியிடம் வழங்கினார்.அமைச்சரின் இந்த மனிதநேய குணத்தை கண்ட கீரை வியாபாரியும், அவரது குடும்பத்தினரும் நெகிழ்ச்சியடைந்தனர். அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் அமைச்சரின் செயலை பாராட்டினர்.மக்களின் குறைகளைக் கேட்டறியும் கள ஆய்வின்போது, சிறு வியாபாரியின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் அமைச்சர் வினோத்ரவி மேற்கொண்ட இந்த நடவடிக்கை, மகாமகக் குளம் பகுதியில் பேசும் பொருளாக அமைந்துள்ளதுசெய்தியாளர் அ.மகேஷ்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கும்பகோணத்தில் அமைச்சர் செய்த செயலால் நெகிழ்ந்து போன மக்கள்! வியாபாரம் மந்தமாக உள்ளது எனக் கூறிய கீரை வியாபாரி உடனே அனைத்து கீரைகளையும் வாங்கிய அமைச்சர் வினோத்ரவி
Related Posts
Add A Comment

