Homeதமிழ்நாடுதமிழக பட்ஜெட்: முந்தைய ஆண்டுடன் வரவு - செலவு மதிப்பீடு ஒப்பீடு

தமிழக பட்ஜெட்: முந்தைய ஆண்டுடன் வரவு – செலவு மதிப்பீடு ஒப்பீடு

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையின் படி மாநிலத்தின் வருவாய் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என்றும், அதே நேரத்தில் நிதிப் பற்றாக்குறை குறையும் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 9 ஆயிரம் கோடியாக இருந்த மொத்த வருவாய் வரவுகள், இந்த நிதியாண்டில் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த நிதியாண்டில் மொத்த வருவாய் செலவினம் 3 லட்சத்து 78 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் இவ்வாண்டு சுமார் 26 ஆயிரம் கோடி உயர்ந்திருப்பதாகவும், மூலதன செலவினம் சுமார் ஐயாயிரம் கோடி அதிகரித்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 3.48% சதவீதத்தில் இருந்து 3.00% சதவீதமாக குறையும் எனவும், மாநிலத்தின் பொருளாதர வளர்ச்சி 5 லட்சம் கோடி உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img